திரைச்செய்திகள்
Typography

ஆசைப்பட்டது கிடைக்கலேன்னா கிடைத்ததை ஆசைப்பட வேண்டியதுதான்.

ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசையே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் பாண்டிராஜ் இயக்குகிற புதுப்படத்தில் இவர் அவருக்கு தங்கச்சி.

ஒரு பக்கம் அப்செட் என்றாலும், இன்னொரு பக்கம் கிடைத்த வாய்ப்பை பிய்த்து உதறிவிடுவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஐஸ்!

ஹீரோயின் என்றால் ஒரு சம்பளமும் கேரக்டர் ரோல் என்றால் வேறொரு சம்பளமும் கொடுக்கிற கம்பெனிகளுக்கு நடுவில் இப்படியொரு முடிவை ஐஸ் எடுத்தது சரியா, தவறா? ஒரு தவறும் இல்லை என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

ஏன்? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உரிய மரியாதையை துளி கூட குறைக்காமல் தர முடிவெடுத்திருக்கிறார்களாம் கம்பெனியில்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்