திரைச்செய்திகள்
Typography

அட்லீ இயக்கி வரும் விஜய் 63 படத்தின் பட்ஜெட் என்னவென்றே தெரியவில்லை.

அதற்குள் இந்த படத்தின் வியாபாரத்தை முடிக்க ஆளாளுக்கு ஆசைப்படுகிறார்களாம்.

படத்தை மொத்தமா வாங்கறோம் என்று நாள்தோறும் நச்சரிப்புகள் தொடர்வது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்சுக்கு கடும் எரிச்சலையே ஏற்படுத்துகிறதாம்.

ஏன்? அட்லீ சொன்ன பட்ஜெட்டில் முடிப்பாரா என்கிற கேள்வி அவரைப்பற்றி அறிந்த எல்லாருக்கும் இருக்கும்.

அப்படியிருக்க... இப்பவே ஒரு விலையை எப்படி நிர்ணயிப்பது? இதுதான் ஏ.ஜி.எஸ் சின் குழப்பம்.

இவ்வளவு கொடுமையிலும் ஒரு ஆறுதல். இன்றைய தேதி வரைக்கும் ஒரு பைசாவுக்கு கூட பைனான்சியர்களிடம் கையேந்தி நிற்கவில்லை ஏ.ஜி.எஸ். எல்லாம் சொந்தப் பணம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS