திரைச்செய்திகள்
Typography

தான் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காக அடப்படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்களிடம் ஆறு மாதம் தேதி கேட்கிறாராம் மணிரத்னம்.

ஜெயம் ரவி, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு, துல்கர் சல்மான், என்று நீள்கிறது பட்டியல்.

இதில் விஜய் சேதுபதி மட்டும் செம அப்செட். படத்தை விடவும் முடியல. மொத்தமா தேதிகள் ஒதுக்கவும் முடியல. நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்க சார் என்று மணியிடமே பொறுப்பை விட்டுவிட்டார்.

அலசி ஆராய்ந்து பிரித்து பீராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சேது இல்லாமல் பொன்னியின் செல்வனே இல்லை என்கிற அளவுக்கு இவர் மீது அன்பு செலுத்துகிறாராம் மணி. வுட்டா சேதுவின் செல்வன்னு பேரு வைப்பாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்