திரைச்செய்திகள்
Typography

பத்து நாட்களோ, அல்லது பதினாலு நாட்களோ... போனிக்கபூர் தயாரிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்க அஜீத் கொடுத்த கால்ஷீட் இவ்வளவு நாட்கள்தான்.

ஆனால் இதற்கே ஐம்பது கோடியை அள்ளிக் கொடுக்க தயாராகிவிட்டார்கள்.

ஏனிந்த தாராளம்? மொத்தம் அவரை வைத்து மூன்று படங்களை திட்டமிட்ட போனிக்கபூர், இப்போது நாலாவது முறையாகவும் அவரை வளைத்துப் போட முயற்சி எடுக்கிறாராம்.

அதற்காகதான் இப்படி அள்ளிக் கொடுப்பது.

இதை கூட பொறுத்துக் கொள்ளலாம். அஜீத் நடித்த ‘விஸ்வாசம்’ திரைக்கு வந்த நாலே மாதங்களில் மீண்டும் ஒரு அஜீத் படம் ரிலீஸ்.

அதுதான் இந்த பிங்க் ரீமேக். மே 1 ந் தேதிக்கு திட்டமிடப்பட்டிருப்பதால், அஜீத் ரசிகர்கள் குஷியாவார்கள். அதே நேரத்தில் அடிக்கடி வந்தால் ஒரு அலுப்பு வருமே, அதை யார் கவனிப்பது?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்