பவன் கல்யாண் நடித்த தெலுங்கு படத்தைதான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று ரீமேக்கியிருக்கிறார் சுந்தர்சி.
பவன் கல்யாண் ரோலில் சிம்பு எப்படி பொருந்தியிருக்கிறார்? இந்த எதிர்பார்ப்பு எகிறுமல்லவா? பவன் கல்யாணுக்கே அது இருக்கிறதாம்.
படத்தை முழுசாக பார்த்த தெலுங்கு பிரமுகர் ஒருவர், ஸ்பாட்டிலிருந்தே பவனுக்கு போன் அடித்தாராம்.
நீங்க பண்ணிய ரோல் எவ்வித டேமேஜூம் இல்லாமல் கன்வெர்ட் ஆகிருச்சு.
சிம்புவை நீங்க மனசார பாராட்டலாம் என்று கூற, அருகிலிருந்த சிம்புவுக்கு முகமெல்லாம் வெற்றி ப்ளட் சர்குலேட் ஆகியிருக்கிறது.
படம் வருகிற நேரத்தில் தன் சர்வ பெரிய தில்லாலங்கடி வேலைகளை ஸ்டார்ட் பண்ணிவிட்டார் சிம்பு.
அதுவே படத்திற்கு நல்ல பிரமோஷனாக இருக்கிறது.