திரைச்செய்திகள்
Typography

வரவர அஜீத், விஜய் பட பூஜைகள் அவர்களுக்கே தெரியாமல் நடந்தால் கூட ஆச்சர்யமில்லை.

அவ்வளவு சிக்கனம். அஜீத் வராமலே அவர் பட பூஜைகள் நடந்திருக்கின்றன.

அது தனிக்கதை. விஜய் 65 பட துவக்கவிழாவும் சிம்பிள் பூஜையோடு நடந்து முடிந்தது. படக்குழுவினர் தவிர வேறு எந்த சினிமாக்காரர்களுக்கும் அழைப்பு இல்லை.

படத்தின் ஹீரோயின் நயன்தாரா வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்குப் பறந்த நிலையில் அவரும் இல்லை ஸ்பாட்டில்.

பின்னி மில்லில் இப்படி எளிமை காட்டிய படக்குழு, படத்தில் அவ்வளவு பிரமாண்டத்தையும் இறக்கி வைத்து மிரட்டும் என்பதில் துளியும் டவுட் இல்லை.

ஏன்? இந்த விழாவே பல கோடி மதிப்புள்ள செட்டுக்குள்தானே நடந்தது?

BLOG COMMENTS POWERED BY DISQUS