திரைச்செய்திகள்
Typography

450 தியேட்டர்கள். எட்டு நாள் வசூல். எப்படிய்யா 125 கோடி? என்று விஸ்வாசம் விநியோகஸ்தர் கே.ஜே.ஆர் ராஜேஷை எள்ளி நகையாட ஆரம்பித்துவிட்டார்கள் கோடம்பாக்கத்தில்.

ரஜினியின் பேட்ட படம் 11 நாட்களில் 100 கோடி வசூல் செய்யும் என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணி தெரிவித்த நிலையில், திடீரென இவர் உள்ளே புகுந்து எட்டு நாளில் 125 கோடி என்று சொன்னது பலருக்கும் அதிர்ச்சி.

ஆனால் இது குறித்து சத்தியம் பண்ணாத குறையாக சமாளிக்கும் ராஜேஷ், ‘யாருக்காவது டவுட் இருந்தா என் ஆபிசுக்கு வந்து கேளுங்க’ என்று கூறியிருக்கிறார். தடுக்கி விழுந்தாலும் தாளம் தப்பிருச்சு என்று சொல்லுகிற ஆள் போலிருக்கு. நல்லா வருவீங்க சார்...

BLOG COMMENTS POWERED BY DISQUS