திரைச்செய்திகள்
Typography

மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடிக்கிறார் என்றால் அது பதினைந்து வருஷத்திற்கு முன் பரபரப்பு செய்தி.

ஆனால் இப்போ? பெரிய சுவாரஸ்யம் இல்லைதான். 

இருந்தாலும் இந்த ஜோடி தரப்போகும் படம் பரபரப்பை கிளப்பக்கூடும். ராணுவ ரகசியங்களை அண்டை நாட்டுக்கு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்ற நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படத்தில்தான் விஞ்ஞானியின் மனைவியாக நடிக்கிறார் சிம்ரன்.

நடிப்பை பிழிந்தெடுக்க வேண்டிய ரோல்.

அதை சிம்ரன் சரியாக செய்வார் என்று நம்பிக் கொடுத்திருக்கிறார் மாதவன்.

பேட்ட படத்தில் பெருத்த கைதட்டல்களை அள்ளிய சிம்ரன், தன் சென்னை குடியிருப்பை அதிரடியாக காலி பண்ணிவிட்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது அடிஷனல் செய்தி.

BLOG COMMENTS POWERED BY DISQUS