திரைச்செய்திகள்
Typography

சூர்யாவை தரை லோக்கலாக காட்டினாலும் சந்தோஷம். ஹைஃபை யாக காட்டினாலும் சந்தோஷம் என்று அவரது ரசிகர்கள் ட்யூன் ஆகிவிட்டார்கள்.

ஹைஃபைக்கு கே.வி.ஆனந்த்தும், கவுதம் மேனனும்! தரை லோக்கலுக்கு ஹரி என்று சூர்யாவும் ட்யூன் ஆகிவிட்டார்.

அந்த வகையில் மீண்டும் ஹரியுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க தயாராகிவிட்டார்.

இந்தப்படத்தை வெகு காலம் கழித்து ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கிறது.

பொதுவாகவே தற்போதைய சினிமா சூழலை கருத்தில் கொண்டு ஒதுங்கியிருந்த ஏ.வி.எம் இப்போது களத்தில் இறங்கியது எப்படி?

பிசினஸ் எல்லைகள் பெருகியதுதானாம்.

நெட் பிளிக்ஸ், அமேசான், என்று டிஜிட்டல் பிளாட்பார்ம் காட்டிய ஜிகினா அழைப்பு இது.

இந்த அழைப்பு வசந்த அழைப்பாக தொடரட்டும்...

BLOG COMMENTS POWERED BY DISQUS