திரைச்செய்திகள்
Typography

‘பேட்ட’ படத்தில் ரஜினையை பார்த்த அத்தனை பேரும் ஆஹா அற்புதம்... என்று கொண்டாடிவிட்டார்கள்.

அப்படியே 90 களில் பார்த்த ரஜினியின் துள்ளலையும் தோற்றத்தையும் மீட்டுக் கொண்டு வந்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

காலா, கபாலியோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள், ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்தின பா.ரஞ்சித் இந்த படத்தை பார்த்தாவது தன்னை திருத்திக்கணும்’ என்கிற அளவுக்கு காமென்ட் போட்டு காலி பண்ணுகிறார்கள்.

இதற்கு பதில் சொல்லி சொல்லியே விரல் ஒடிகிறது பா.ரஞ்சித்தின் அடிப்பொடிகளுக்கு.

இது ஒரு புறம் இருக்க, கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்து நன்றி சொன்னாராம் ரஜினி.

‘விரைவில் இன்னொரு படத்திற்கு தயாராகுங்க’ என்றும் கூறியிருப்பதாக தகவல். ஓஹோய்....!

BLOG COMMENTS POWERED BY DISQUS