திரைச்செய்திகள்
Typography

தமிழ்நாட்டில் கோலாகலத்தை விடுங்கள்.

ஆந்திராவில் ‘பேட்ட’ படத்திற்கு அநியாய சிக்கல் ஏற்பட்டு கடைசி நேரத்தில் தப்பித்தது. தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நடித்த மூன்று படங்கள் வெளிவந்ததால் சுமார் 20 கோடி கொடுத்து பேட்ட யை வாங்கிய விநியோகஸ்தருக்கு செம மொட்டை.

பத்து சதவீத தியேட்டர்கள் கூட கிட்டவில்லை. கிடைத்ததும் பாடாவதி தியேட்டர்கள்தான். மனம் நொந்திருந்த விநியோகஸ்தர்களுக்கு அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் நல்ல செய்தி.

தெலுங்கில் வெளியான மூன்று முக்கிய படங்களும் அவுட்.

வேறு வழியில்லாமல் அத்தனை கூட்டம் பேட்ட ஷோவுக்கு கூடியது. தியேட்டர்கள் அதிகரிக்கவும் ஆரம்பித்தது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு பேட்ட யை மனம் திறந்து பாராட்டிவிட்டார். ‘தலைவர்னா மாஸ்... என்னா ஸ்டைலு?’ என்று அவர் ட்விட் போட்டதும் இன்னும் ஏறியது கூட்டம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்