திரைச்செய்திகள்
Typography

‘விஸ்வாசம்’ படமும் ‘பேட்ட’ படமும் ஒரே நாளில் மோதுவது இன்டஸ்ட்ரியில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ, அது தனி.

ஆனால் ரிலீசுக்கு முன்பே ஆன் டேபிள் பிராபிட் என்கிற வகையில் பேட்ட நிறுவனத்திற்கு 45 கோடியும், விஸ்வாசம் நிறுவனத்திற்கு 20 கோடியும் லாபம் கிடைத்திருக்கிறதாம்.

இருந்தாலும், ‘தனித்தனியா வந்திருந்தா நாங்க நல்லா கல்லா கட்டியிருப்போமே’ என்று கலங்குகிறது தியேட்டர் வட்டாரம்.

அப்படியிருந்தும் ஆளுக்கு கொஞ்சம் என்கிற விகிதாச்சாரத்தில் தியேட்டரை பிரித்துக் கொடுத்து சமநிலை வகிக்கவும் தவறவில்லை!

அதிகாலை ஷோ வுக்கு அரசு கெடுபிடி காட்டினாலும், கொஞ்சம் கூட அதையெல்லாம் மதிக்கவில்லை பல தியேட்டர்கள்.

ஆயிரம் ரெண்டாயிரம் என்று டிக்கெட் கொள்ளை அமோகம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS