திரைச்செய்திகள்
Typography

உள்ளம் கொள்ளா வருத்தத்திலிருக்கிறார் ஓவியா. ஏன்? அவர் சும்மா வந்து போன கெஸ்ட் ரோல் படங்களையெல்லாம் அவரே ஃபுல் படத்திலும் வருவது போல விளம்பரம் செய்கிறார்களாம்.

தன் உயிரான ரசிகர்களை ஏமாத்துற வேலையா இருக்கே என்பதுதான் கவலைக்கெல்லாம் காரணம்.

‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ படத்தில் சில காட்சிகளே வருகிற ஓவியாதான் எல்லா போஸ்டர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

இன்னொரு படம் ‘ஓவியாவை விட்டா யாரு இருக்கா?’ இவ்விரண்டு பட விளம்பரங்களாலும் துணுக்குற்ற ஓவியா, துணுக்கை போக்க நறுக்கென நாலு வார்த்தை பேசியிருக்கிறார்.

என்னவென்று? ‘இனிமே இப்படியெல்லாம் செய்யாதீங்க’ என்று!

BLOG COMMENTS POWERED BY DISQUS