திரைச்செய்திகள்
Typography

உலகத்தில் வேறு எந்த படத்திற்கும் இந்த அநியாயம் நடக்கக் கூடாது என்று கதறுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது ‘விஸ்வாசம்’ படத்தின் நிலைமை.

‘பேட்ட’ படத்துடன் மோதுகிற போதே உஷாராக இருந்திருக்க வேண்டுமல்லவா?

தமிழகம் முழுக்க ‘விஸ்வாசம்’ படத்திற்காக பிடித்த தியேட்டர்களை கொத்து கொத்தாக கபளீகரம் பண்ணிவிட்டது ‘பேட்ட’ படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

வெறும் 400 தியேட்டர்கள். அதிலும் பல ஏரியாக்களில் சின்ன தியேட்டர்களில்தான் வெளியாகிறது அஜீத் படம்.

இப்படி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், அதிகாரம் இருப்பதை போல நடந்து கொள்ளும் உதயநிதியை பொருமிக் கொண்டே நகர்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

தனித்தனியாக வந்திருந்தால் இரண்டு படங்களிலுமே நிறைய லாபம் பார்த்திருக்கலாம்.

இப்படி பண்ணிட்டாங்களே என்று பட நிறுவனங்களின் மீதும் கொல காண்டில் இருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்