திரைச்செய்திகள்
Typography

அமெரிக்காவிலிருக்கிறார் ரஜினி. அதே நாட்டில்தான் இருக்கிறார் கமல். இவ்விருவரும் சந்திக்கப் போவதில்லை.

அப்படியே சந்தித்தாலும் அரசியல் பேச மாட்டார்கள் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டி வருகிறார்கள் இங்கே.

ஆனாலும் கமல் போனது எதற்காக? இந்தியன் 2 படத்தில் விசேஷ மேக்கப்புடன் வரப்போகிறார் அல்லவா?

அதற்கான ஸ்பெஷல் விஷயங்களை அங்கே சில நாட்கள் தங்கியிருந்து மேற்கொள்ளப் போகிறாராம்.

எப்படியெல்லாம் வித்தை காட்டப் போகிறாரோ என்று கமல் ரசிகர்கள் கட்டை விரல் உயர்த்தினாலும், அட போங்கப்பா... என்று அசால்ட் பண்ணுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஏன்? ‘இந்த அமெரிக்கா, ஹாலிவுட் பில்டப்புகள் எதுவும் இல்லாமல் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி மேக்கப் கூட நல்லாதானேப்பா இருந்திச்சு?’ என்பதுதான் கோடம்பாக்கத்தின் கோக்குமாக்கு கருத்து!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்