திரைச்செய்திகள்
Typography

கடந்த சில வாரங்களுக்கு முன்பான ரிலீசில் மாரியும் சீதக்காதியும் படு சறுக்கல் வாங்கிவிட்டது.

இவ்விரண்டு தியேட்டர்களில் கனாவை நிரப்புவார்கள் என்று எதிர்பார்த்தால், அங்கும் கேம் ஆடுகிறார்களாம் சில விநியோகஸ்தர்கள். விஷால் ரிலீஸ் செய்திருக்கும் கே.ஜி.எஃப் படத்தை போடுங்களேன் என்று சிபாரிசு செய்கிறார்களாம்.

இருந்தாலும், கனா படத்தை ஆத்மார்த்தமாகவே விரும்பும் தியேட்டர்காரர்கள் மட்டும் கே.ஜி.எஃப் விஷயத்தில் அசைந்து கொடுக்கவில்லை.

அமெரிக்காவிலிருக்கிற மிஸ்டர் மாரிக்கு, சிவகார்த்திகேயன் ஜெயிச்சுட்டாரே என்கிற ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை.

அங்கிருந்தே ‘கனாவுக்கு தியேட்டர் ஒதுக்காதீங்க. நம்ம படம் அடுத்தடுத்து வருது, கணக்கை நேர் பண்ணிக்கலாம்’ என்று பேசி வருகிறாராம் தியேட்டர்காரர்களிடம்.  தூர தேசம் போனாலும் கோர முகம் மாறாது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்