திரைச்செய்திகள்
Typography

‘சபாஷ் நாயுடு’ என்றொரு படத்திற்கு பெருமளவு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அப்படத்தை மெதுவாக நகர்த்தியும் வந்த கமல், ஷுட்டிங் நடைபெறும்போது பெற்ற இன்னல்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

கவுதமி போனார்... இவருக்கு கால் உடைந்தது... இன்னும் இன்னும் சில சிக்கல்கள். அதற்கப்புறம் அந்த படத்தை தொடர்வதற்கு அவர் என்ன ஃபுல் டைம் நாத்திகரா? சென்ட்டிமென்ட் காரணமாக அப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். கேட்டு கேட்டு பார்த்து கிறுகிறுத்துப் போன லைகா நிறுவனம், ‘சரி... அது கிடக்கட்டும். இந்தியன் 2 வை ஆரம்பிங்க’ என்று நெருக்கடி கொடுத்தது. அம்மி பறக்கணும்னா ஆடிக்காற்று முரட்டாயிருக்கணும்! எப்படியோ அம்மி பறக்க சம்மதம் தெரிவித்திருக்கிறது. இந்தியன் 2 ன் ஷுட்டிங் இம்மாதம் 14 ந் தேதி தொடங்குகிறது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்