திரைச்செய்திகள்
Typography

விஜய் ஆன்ட்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன்’ பி மற்றும் சி பகுதிகளில் செம கலெக்ஷன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

யார் அப்படி சொல்வது? அவங்கதான்! ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனத்திற்கு பட்டை நாமம். ஏற்கனவே சண்டக்கோழி 2 ஐ வாங்கி சுமார் ஐந்து கோடி வரைக்கும் நஷ்டம் பார்த்த அந்த நிறுவனம், இந்தப்படத்திலும் கிட்டதட்ட அதில் பாதியளவுக்கு துண்டு போட்டுக் கொண்டது. இவ்வளவு களேபரத்திலும் தன் படத்திற்கான பணத்தை முன் கூட்டியே பெற்றுக் கொண்ட விஜய் ஆன்ட்டனி மட்டும் ஹேப்பி. திமிரு புடிச்சவனை  தயாரித்த வகையில் இவருக்கு மட்டும் சுமார் எட்டு கோடி லாபம் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். இதுபோக தெலுங்கில் இப்படம் செம ஸ்பீட் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. பல்லக்கு தூக்குனவருக்கு தோள்வலி. படுத்துகிட்டு வந்தவருக்கு படு சுகம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்