திரைச்செய்திகள்
Typography

இதற்கு முன் தமிழ்சினிமாவில் எந்த இயக்குனரும் செய்யாத கொடுமையை இயக்குனர் ஹரி செய்திருக்கிறார்.

சாமி ஸ்கொயர் என்ற படத்தை தயாரித்து தக்காளி சட்னியாகிவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ். சுமார் எட்டு கோடி சம்பளத்தை ஹரியின் இயக்கத்திற்காக கொடுத்தவர், அதற்கான டி.டி.எஸ் அமௌன்ட்டை கட்டியிருக்கவில்லை. கடுப்பான ஹரி, நேரடியாக ஷிபு ஆபிசுக்கு வந்தாராம். அங்கிருந்த கம்ப்யூட்டர், ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வேனில் ஏற்றியவர், ‘டி.டி.எஸ் சர்டிபிகேட்டை கொடுத்துட்டு பொருளை வாங்கிக்கலாம்’ என்று முழங்கிவிட்டு கிளம்பினாராம். சிங்கம் படத்தில் வரும் சீன் மாதிரியே இருக்கிறதல்லவா? கோடி கோடியாக கொட்டி படம் எடுத்த ஷிபுவுக்கு எள்ளு. படம் இயக்கிய ஹரிக்கு எட்டு கோடி பில்லு! இந்த லட்சணத்துல தேவையா இந்த தில்லு?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்