திரைச்செய்திகள்
Typography

அல்வா கொதிக்கிற அதே சட்டியில் ஆனியன் பகோடாவும் கொதிக்க முடியாதில்லையா?

அந்த உண்மை சற்று லேட்டாகதான் புரிந்திருக்கிறது விஜய் ஆன்ட்டனிக்கு. வொய்? இவரே தயாரித்து இவரே நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படம் விஜய்யின் ‘சர்கார்’ படத்துடன் மோதுவதாக உறுதி காட்டினார். (இவர் தீபாவளி ரிலீஸ் என்றுதான் சொல்கிறார்.

பட்... அதே தேதியில் சர்கார் வருதே?) நினைப்பு இனிப்பா இருந்தாலும், நிஜம் கசப்பா இருந்ததுதான் கொடுமை. தமிழ்நாட்டிலிருக்கும் ஆயிரத்து சொச்ச தியேட்டர்களில் தொண்ணூறு சதவீதத்தை சர்காரே பிடித்துக் கொண்டது.

மிச்ச ஏரியாவில் படத்தை கொடுத்து அது வசூல் பண்ணி... என்ன சுகத்தை காண முடியும்? சைலண்டாக ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டார். இதைதான் ஆரம்பத்திலேயே சொல்லி அலர்ட் பண்ணியது கோடம்பாக்கம். கேட்டால்தானே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்