திரைச்செய்திகள்
Typography

ரிலீஸ் தேதி நிர்ணயிப்பதில் தொடர் சிக்கலை சந்தித்து வரும் படங்களில் சூர்யா படமும் சேர்ந்து கொண்டதுதான் ஐயகோ.

என்.ஜி.கே என்ற பெயரில் உருவாகி வரும் இப்படம் இன்னும் முடியவில்லை. தீபாவளிக்கு வெளியிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் ஷாக்.

அஜீத்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட படமும் மோதும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

நடுவில் நாமும் நுழைந்தால் சட்னிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

அது மட்டுமல்ல, அதே நாளில் சூர்யாவுக்கு பெருத்த மார்க்கெட் வேல்யூ உள்ள ஆந்திராவிலும் முக்கிய நடிகர்களின் படங்கள் வருவதால், ஏப்ரல் 14 ந் தேதிக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

வரும்போது வாங்க. ஆனா ரசிச்சு பார்க்குற மாதிரி வாங்க!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்