திரைச்செய்திகள்
Typography

விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டன. சில தினங்களுக்கு முன் அஜீத்தும் வந்து டப்பிங் பேச ஆரம்பித்தார்.

எப்படியோ விஷயம் வெளியே கசிய, தினந்தோறும் ரசிகர்கள் வந்து காத்திருக்கிறார்கள். இந்த தொல்லை பொறுக்க முடியாமல்தான் கடந்த முறை டப்பிங் பணியை ஐதராபாத்துக்கு மாற்றினார். ஆனால் இந்த முறை சென்ட்டிமென்ட் காரணமாக சென்னையிலேயே வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார்.

ஒருநாள் அதிகாலை 5 மணி வரை காத்திருந்த இளைஞர்கள், அஜீத் கிளம்பும்போது அவரது கார் பின்னாலேயே ஓடியிருக்கிறார்கள். சட்டென்று காரை நிறுத்தச் சொன்ன அஜீத், ‘அதிகாலை 5 மணி ஆகிருச்சு. இவ்வளவு நேரம் கண்ணுமுழிச்சு காத்திருக்கணுமா?’ என்று கடிந்து கொண்டு, ‘நானும் டயர்டா இருக்கேன். இருந்தாலும் எடுத்துக்கோங்க’ என்று நின்று நிதானமாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்