திரைச்செய்திகள்
Typography

சர்கார் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த வருண் என்பவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிவிட்டது சங்கம்.

அவருக்கு கொடுக்கப்பட்ட கடிதம்தான் வேல்யூ பாயின்ட். உங்கள் கதையும், சர்கார் கதையும் கிட்டதட்ட 90 சதவீதத்திற்கு மேல் ஒன்று போல இருக்கிறது என்று எழுத்துபூர்வமான கடிதத்தையும் கொடுத்துவிட்டார்களாம். இதை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு போய்விட்டார் வருண் ராஜேந்திரன்.

இந்தக்கதை எப்படி ஏ.ஆர்.முருகதாசிடம் போனது. விஜய்யே கதையை வருணிடம் ஒருமுறை கேட்டிருந்தாராம். அப்போது ஜெ. உயிருடன் இருந்தார். அரசியல் கதையில் இப்போதைக்கு நடிக்க முடியாது என்று சொல்லியனுப்பிவிட்டார்.

அதற்கப்புறம் விஷாலிடம் கதை சொன்னாராம் வருண். அப்போது அவரை விஷாலிடம் அழைத்துச் சென்ற ஒருவர்தான் முருகதாஸ் காம்பவுன்டில் முக்கிய ஆள். கதை அப்படி கசிந்திருக்கலாம் என்கிறார்கள். அறிவுத் திருடர்களை ஆண்டவன்தான் திருத்தணும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்