திரைச்செய்திகள்
Typography

சர்கார் பட வியாபாரம் 200 கோடியை எட்டிவிட்டது. இந்த உச்சத்தை தொட்டது விஜய்யின் மார்க்கெட் வேல்யூ மட்டுமல்ல.

சன் பிக்சர்சின் சாதுர்யமும்தான். ஆனால் படு பயங்கர பதற்றத்தில் இருக்கிறாராம் விஜய். ஒரு காலத்தில் ரஜினியே தன் பட வியாபாரம் இந்த தொகைக்கு மேல் போகக் கூடாது என்று கூறிவிடுவார். ஆனால் வியாபார முறைகள் மாறிய பின் யார் யார் கைகளுக்கோ படம் தவழ்ந்து தவழ்ந்து செல்ல ஆரம்பித்தது.

இவரும் அமைதியாகிவிட்டார். ஆனால் படம் ஓடாவிட்டால், விற்றவர்களை விட்டுவிட்டு ரஜினியிடம் வந்து நின்று பழகிவிட்டார்கள். அப்படியொரு சங்கடம் தனக்கும் நேரக்கூடும் என்று பதற ஆரம்பித்திருக்கிறாராம் விஜய். இதற்கு முன்பு கூட சில படங்களின் நஷ்டத்துக்கு விஜய் தண்டம் அழுதிருக்கிறார். சுனாமி ரிப்பீட் ஆகாமலிருக்கணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்