திரைச்செய்திகள்
Typography

அண்மைக்காலமாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த மணிரத்னம், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் மூலம் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.

கம்பெனி தரப்புக்கு கைநிறைய லாபம். அது இருபது கோடியை தாண்டும் என்கிறது விநியோக வட்டாரம். மீண்டும் லைக்காவே மணிரத்னத்தை உபயோகப்படுத்த விழைகிறதாம். அவர் அழைத்தால் அலறி அடித்துக் கொண்டு கால்ஷீட் கொடுக்க முன்னணி நடிகர்கள் காத்திருக்க... மணியின் பார்வை ஒரு தெலுங்கு ஹீரோ மீது மையம் கொண்டிருக்கிறதாம். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கு குறைந்த பட்சம் பல மாதங்கள் இருக்கணும் என்று நினைக்கிற மணி, Money க்காக தன்னை மாற்றிக் கொள்வாரா என்ன? ஆமா... தெலுங்கு ஹீரோ ஏன்? உள்ளூர் ஊறுகாயில உப்புப்புளி குறைச்சலா இருக்கா, என்ன?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்