திரைச்செய்திகள்
Typography

இன்றைய ராசிப்பலன் போலாகிவிட்டது மீ டூ பரபரப்பு.

‘நல்லவேளை... நம்ம பேரு இல்ல’ என்று சந்தோஷத்தோடு உறங்கப் போகும் பிரபலங்கள் அதே சந்தோஷத்தோடு மறுநாள் கண் விழிக்கிறார்களா என்பதுதான் களேபர சுச்சுவேஷன்!

ஐதரபாத்தில் ஷுட்டிங்கில் இருந்த சிம்புவுக்கு அடித்தது சொரேர்... இவருடன் ‘கெட்டவன்’ படத்தில் ஜோடியாக நடித்த லேகா வாஷிங்டன், ‘கெட்டவன் மீ டூ’ என்று மூன்றே வார்த்தைகளை வெளியிட்டு சினிமாவுலகத்தை கொந்தளிக்க விட்டார்.

அவர் ‘கெட்டவன்’ படத்தின் இயக்குனரை சொல்கிறாரா, தயாரிப்பாளரை சொல்கிறாரா, அல்லது ஹீரோவான சிம்புவை சொல்கிறாரா? என்று பிரித்தறிய முடியாத சிக்கல்.

அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த சிம்பு ரசிகர்கள், லேகா இதற்கு முன் ஏழு தலைமுறைக்கும் கேட்டிராத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதும். மீ டூ வுக்கு தேவை, மிதமிஞ்சிய தன்னம்பிக்கை மட்டுமல்ல... மிரள விடுகிற அளவுக்கு பினாயில்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்