திரைச்செய்திகள்
Typography

சீமானும் பா.ரஞ்சித்தும் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டதை நாடே சற்று திகிலோடுதான் கவனித்தது.

இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டையும் கேள்வி கேட்டே கிளறிவிட்ட மீடியாக்களுக்கு சில காலம் நல்ல தீனி கூட கிடைத்தது. எல்லாவற்றையும் ஒரு ‘பரியேறும் பெருமாள்’ வந்து காலி பண்ணிவிட்டான்.

இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றுக்கு வந்த சீமானை, அப்படத்தின் தயாரிப்பாளரான பா.ரஞ்சித் வரவேற்றார்.

அங்கே விழுந்தது முதல் புன்னகை. அதற்கப்புறம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த சீமான், அப்படியே ரஞ்சித்தையும் இயக்குனர் மாரி செல்வராஜையும் கட்டிப்பிடித்து தன் பாராட்டுகளை தெரிவிக்க...

போன இடம் தெரியாமல் மறைந்தது பகை. பரியேறும் பெருமாள் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோடு முடியாது. இன்னும் இருக்கு... இருக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்