திரைச்செய்திகள்
Typography

ரசிகர்கள் ஆ.கோ வாக இருக்கிற வரைக்கும் ஹீரோக்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஆனால் அந்த ஹீரோவே ‘ஐயே...’ என்று மெர்சல் ஆகிற அளவுக்கு அவர்கள் நடந்து கொண்டால், ஐயோ பாவம்.

அவர்களும் என்னதான் செய்வார்கள்? விஜய்சேதுபதியும் சிம்புவும் இணைந்து நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படப்பிடிப்பில், அண்ணே அண்ணே... என்று வாய் நிறைய அழைப்பாராம் சிம்பு.

குறுகிய கால நட்புதான். ஆனால் தம்பி தம்பி... என்று பதிலுக்கு பாசம் காட்டினார் விஜய்சேதுபதி.

ஆனால் இது புரியாத ரசிகர் கூட்டம் விஜய்சேதுவுக்கு எதிராக போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.

‘படத்துல எங்க தலைவரே ஏன்யா சுட்டே? எங்க எஸ்.டி.ஆர்ட் வச்சுக்காதே’ என்று எழுதப்பட்டுள்ளது அதில்.

திண்டுகல் மாவட்ட தீவிர ரசிகர்களின் வேலைதான் இது. இதை சிம்புவுக்கும் அனுப்பி வைத்தார்களாம்.

அங்கிருந்து ஒரு பதிலும் சென்று சேரவில்லை இன்னும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்