திரைச்செய்திகள்
Typography

விஜய்யின் ‘சர்கார்’ ஸ்பீச் தமிழக அரசியலை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. ‘எல்லாரும் தேர்தல் வந்த பின்தான் சர்க்கார் அமைப்பார்கள். நாம சர்க்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிற்போம்’ என்று விஜய் சொன்னதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை கட்சிக்காரர்கள்.

எது எப்படியோ? விஜய்யின் ரசிகர் மன்றத்தில் கடும் உற்சாகம் தென்படுகிறது. நிஜத்தில் விஜய்யின் மனதில் என்ன இருக்கிறது? முதலில் ரஜினி வரட்டும். அவருக்கு இங்கு என்ன முடிவை தருகிறார்களோ, அதை வைத்து அடுத்த பிளானில் இறங்கலாம். அதுவரைக்கும் கொட்டோ கொட்டென கொட்டும் சினிமாவை ஏன் விடணும் என்பதுதானாம். சர்கார் மேடையில் கலாநிதி மாறன் சொன்னதை போல ஒரு 3டி படம். அதுவும் சன் பிக்சர்சுக்கே என்ற முடிவுக்கும் அவர் வந்திருக்கிறார். அதற்குள் ஷங்கர் ‘இந்தியன்’ படத்தை முடிச்சுட்டு வந்திருவாரா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்