திரைச்செய்திகள்
Typography

‘சர்க்கார்’ படத்தின் பாடல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்கள்.

விஜய் ரசிகர்களுக்கே பேரதிர்ச்சி. பாடுவது தமிழா, அல்லது உலகத்திலேயே இல்லாத புது லாங்குவேஜா என்கிற அளவுக்கு கன்பியூஸ் ஆகி மண்டை கழண்டார்கள்.

ஏன்? முதல்வரியே இதுதான்... ‘பல்டி பாக்குற டர்ல வுடனும் பல்து’. மிச்சசொச்ச வரிகளும் இப்படியே இருக்க, பாடலை எழுதிய விவேக்கை பிடிபிடியென பிடித்துவிட்டார்கள்.

இதே விவேக்தான் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடலை எழுதி விஜய்க்கு பெரும் புகழ் சேர்த்தார்.

அப்படியிருக்க இப்படி ஏன் குப்புற விழுந்து குலநாசம் செய்தார்? ரசிகர்களின் கோபம் பொறுக்காத விவேக், ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் வந்து என்னென்னவோ சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்குள் ஏ.ஆர்.ரஹ்மான் ட்யூனுக்காக பாட்டு மரண ஹிட். என்னத்தை சொல்ல?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்