திரைச்செய்திகள்
Typography

தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அங்கு பல கோடிகள் அள்ளி வருகின்றன அவரது படங்கள் அத்தனையும்.

அவரை தமிழுக்கு கொண்டு வந்து நோட்டா என்ற பெயரில் அரசியல் படம் எடுத்து வருகிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இப்படத்தின் துவக்க விழாவில், அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது முழுக்க முழுக்க தமிழில்தான் பேசுவேன் என்று கூறியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

இதே போல பல நடிகைகள் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் விஜய்...? மயக்கிவிட்டார் மயக்கி.

சில தினங்களுக்கும் முன் பிரஸ்சை மீட் பண்ணியவர் தமிழில் பேசி அசத்திவிட்டார்.

அதுமட்டுமல்ல, அருமையான திருக்குறள் ஒன்றையும் சொன்னார்.

‘இனி எல்லா மேடைகளிலும் ஒரு திருக்குறள் சொல்வேன்’ என்று ஸ்பெஷல் அதிரடியும் கிளப்பினார்.

வெற்றி யாருக்கும் சும்மா வராது! அதை விஜய் வடிவில் உணர முடிந்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்