திரைச்செய்திகள்
Typography

‘திரும்பவும் ஹீரோவா நடிக்கணுமா? ஆளைவிடுங்க சாமீகளா...’ என்று ஓடிக் கொண்டிருந்த சுந்தர்சியை எப்படி மடக்கினாரோ... வி.இசட்.துரை இயக்குகிற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்திருக்கிறார் அவர்.

‘பேயே இல்லாத பேய்ப்படம்’ என்று முதல் கட்ட அறிவிப்பு செய்திருக்கிறார்கள். கதையே இல்லாத படங்கள் வரும்போது பேயே இல்லாமல் ஒரு பேய்ப்படம் வராதா என்ன? போகட்டும்... 300 கோடியில் உருவாகும் படமாக திட்டமிட்டிருந்த ‘சங்கமித்ரா’வுக்காக சரித்திர புத்தகங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து மேய்ந்து முழுங்கி வந்த சு.சி க்கு, அப்படம் துவங்காமல் போனதில் பலத்த ஏமாற்றம். தேனாண்டாள் பிலிம்ஸ்தான் அப்படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தது. திடீர் பண நெருக்கடியில் சிக்கியதால் திட்டம் பணால். சங்கமித்ராவை நாமே கையில் எடுக்கலாமா என்று திட்டமிடுகிறாராம் சு.சி. அதற்கு மனைவி குஷ்பு பீரோ சாவிய தரணுமே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்