திரைச்செய்திகள்
Typography

விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் ஹிட்டா, பிளாப்பா? என்கிற கணக்கு வழக்குக்கெல்லாம் வேலையே இல்லை.

பிளாப் என்று ஒற்றை வார்த்தையில் தலையெழுத்தை முத்திரை குத்திவிடலாம்.

அதற்கு காரணம் படம் மட்டுமல்ல, வியாபார கழுத்தறுப்புகளும்தான்.

தயாரிப்பாளர் ஷிபு தமீன்சே நேரடியாக படத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஏன்? வாங்குவதாக சொல்லி வாக்குறுதி கொடுத்தவர்கள் கடைசி நேரத்தில் வந்து கையை விரித்துவிட்டார்கள்.

இப்படி செய்யச் சொல்லி அவர்களை தூண்டியதே ஷிபுவுக்கு பிடிக்காத சில சக்திகள்தானாம்.

எப்படியோ, தமிழில் கைகொடுக்காத சாமி மலையாளத்தில் கை கொடுத்திருக்கிறார்.

வெள்ளம்... கஷ்டம்... என்று கரைந்து போயிருக்கும் கேரள ஜனங்கள் அவ்வளவு கொடுமையிலும் விக்ரமின் புஜபலத்தை கரகோஷம் செய்து களித்தார்கள்.

விட்டதை விட்ட இடத்தில்தான் பிடிக்கணும் என்று மீண்டும் தமிழ் ஹீரோக்களை வளைக்க கிளம்பியிருக்கிறார் ஷிபு.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்