திரைச்செய்திகள்
Typography

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ், அவ்வளவு ஸ்மூத்தாக நடக்கப் போவதில்லை.

ஏன்? சிம்பு விட்டு வைத்த மிச்சங்கள் திமுதிமுவென கிளம்பி வருமே? முதல் அச்சுறுத்தல் பிரபல விநியோகஸ்தரும் பைனான்சியருமான திருப்பூர் சுப்ரமணியனிடமிருந்து. எப்பவோ டிஆருக்கு அவர் கொடுத்த பைனான்ஸ் அசல் வட்டி என்று ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது.

திருப்பூராரை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தாராம் சிம்புவின் அப்பா.

இதையடுத்து மேலும் கடுப்பான திருப்பூரார், ‘டிஆருக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டேன்’ என்று மணிரத்னத்திற்கே போன் போட்டு சொல்லிவிட்டாராம். இப்போது தூது மேல் தூது அனுப்பும் டி.ஆருக்கு திருப்பூர் தரப்பிலிருந்து நல்ல பதில் எதுவும் இந்த நேரம் வரைக்கும் வந்து சேரவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்