திரைச்செய்திகள்
Typography

தமிழ்சினிமாவில் வந்து கொண்டிருந்த போலீஸ் கதைகளுக்கே ஒரு புது மிடுக்கு கொடுத்த படம் காக்க காக்க! சூர்யாவின் வெற்றி மகுடத்தில் இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே படம் என்றால், அது இந்த ‘காக்க காக்க’ மட்டும்தான்.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அந்தப்படத்தின் பார்ட்2 இப்போது தயாராகப் போகிறது. அந்தப் படத்தை தயாரித்த அதே தாணுதான் இப்போது இந்த படத்தையும் தயாரிக்கப் போகிறார். இவருக்கும் சூர்யாவுக்கும் நடுவில் நிலவி வந்த புகை மூட்டம் மெல்ல விலகியிருக்கிறதாம். எல்லாம் கபாலி தந்த ஓப்பனிங். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் கவுதம் மேனனையும் அழைத்துப் பேசிய தாணு, அதே வேகத்தில் சூர்யாவையும் இழுத்துப் போட, விரைவில் அறிவிப்பு வரக்கூடும். அந்த படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் இந்த படத்திலும் இருக்கட்டும் என்பதுதான் முதல் கண்டிஷனே. ஆனால் ஜோ இருக்க மாட்டார் என்பதுதான் சூர்யாவின் கண்டிஷன். இவருக்கும் கவுதம்மேனனுக்கும் நடுவில் இருந்த மனக்கசப்பை கூட ‘என்கவுன்ட்டர்’ செய்துவிட்டது இந்த பார்ட்2! 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்