திரைச்செய்திகள்
Typography

‘சண்டக்கோழி2’ க்குப் பின், தான் நடிக்கப் போகும் படங்களை முடிவு செய்துவிட்டார் விஷால். அவர் கமிட் செய்து வைத்திருக்கும் மூன்று இயக்குனர்களில் ஒருவர்,

அண்மையில் மிஸ்டர் சந்திரமவுலி என்ற படுதோல்வி படம் கொடுத்த மிஸ்டர் திரு(?). சரி... அது விஷாலின் விருப்பம். ஆனால் அவர் பண்ணும் இன்னொரு விஷயம்தான் யாருக்கும் புரியாத புதிர். தனக்காக கதை கேட்க நடிகர் ரமணாவையும், நந்தாவையும் நியமித்திருக்கிறாராம்.

இவர்களின் மார்க்கெட் நிலவரப்படி ஒருவரும் இவர்களை சீண்டுவதில்லை. ஆனால் விஷாலுக்காக இவ்விருவரும் கதை கேட்கிறார்கள் என்று தெரிந்தபின் மொய்கிறார்களாம். இப்படி நாலா புறத்திலிருந்தும் கதை சொல்ல வருகிற அனுபவம் அவர்களுக்கு வாய்த்ததே இல்லை அல்லவா? ரொம்பவே டீஸ் பண்ணுகிறார்களாம் உதவி இயக்குனர்களை! மண்டையே மவுனமா இருக்கும்போது, குடுமி ஏன்ங்க குய்யோ முய்யோன்னு குதிக்குது?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்