விஜய்யை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்த கமலின் ட்விட்டர் பதில், நாடு முழுக்க பரவி வேறொரு பார்வையை ஏற்படுத்திவிட்டது.
கமலின் தளபதியாகிறார் விஜய் என்றும் செய்திகள் பரவ... தன் பங்குக்கு ரஜினிக்கு குறுந்தகவல் அனுப்பி நன்றியும் சொல்லிவிட்டார் விஜய். இதற்கப்புறம்தான் கலகம் ஸ்டார்ட். ரஜினியின் ரசிகர்கள் விஜய் கமல் இருவரையும் சேற்றில் தள்ளி செங்கல்லால் அடிக்காத குறையாக திட்டித் தீர்த்தார்கள்.
இந்த திட்டும் வசவும்தான் ஒரு நாள் ட்ரென்டிங்! பதிலுக்கு பதில் தாக்குதல் வேண்டாம் என்று முடிவெடுத்த கமல் விஜய் ரசிகர்கள் அமைதிகாத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.