சமீபத்தில் திரைக்கு வந்த ‘டிக்டிக்டிக்’ முதல் மூன்று நாட்கள் நல்ல வசூல் என்கிறார்கள். தமிழில் வந்த முதல் விண்வெளிக்கதை என்று விளம்பரம் செய்த காரணத்தாலும், படத்தில் ஏதோ ஒரு விஷயம் புதுசாக இருப்பதாலும்தான் இப்படியொரு வரவேற்பு.
பட்... ‘டிக்’கு என்னவோ விமர்சன ரீதியாக மொக்கைதான். சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன்தான் இப்படத்தின் இயக்குனர். மீண்டும் சிபிராஜை வைத்தே இன்னொரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆன இவர், ‘டிக்’கின் சுமார் வெற்றிக்குப்பின் பெரிய ஹீரோக்கள் பக்கம் கண்களை மேய விடுகிறாராம். அப்ப சிபிராஜ்? ஓட்டை விழுந்த கிளிக் கூண்டுதான்!