திரைச்செய்திகள்
Typography

சிம்புவுடன் எந்த ஹீரோயின் நடித்தாலும் அவர் சிம்புவை பற்றி ஏதாவது பேசியே தீருகிற அளவுக்கு ஏதோ ஒன்று நடக்கும்.

ஆனால் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரைக்கும் சிம்பு பற்றி வாயையே திறக்கவில்லை.

இருவரும் ஜோடி இல்லைதான். படப்பிடிப்பில் அருகருகே இருந்திருக்கலாம்.

அதுபற்றியாவது பேச வேண்டும் அல்லவா? ஆனால் ‘நல்லாயிருக்கீங்களா?’ என்று கேட்டால் கூட, மணிரத்னம் பற்றி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு ‘ஆமாம்... என்ன கேட்டீங்க?’ என்கிறார்.

விபரமான செடிக்குதான் தெரியும்... இலை முக்கியமா, கிளை முக்கியமா? என்று. ஆனால் சிம்பு அப்படியல்ல. தனது பிரத்யேக வீடியோ பதிவில் ஐஸ்வர்யா பற்றியும் சில கருத்துக்களை கூறி அசரவிட்டிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்