திரைச்செய்திகள்
Typography

ஒரு காலத்தில் தமிழ்சினிமாவின் சமந்தா, காஜல், தமன்னாவெல்லாம் சிம்ரன்தான்!

கொடிகட்டிப் பறந்த சிம்ரனின் கலை வாழ்வு, கல்யாணத்தில் முடிந்ததுதான் துரதிருஷ்டம்.

அப்படியிருந்தும் விடாப்பிடியாக தமிழ்சினிமாவை நேசித்து வரும் சிம்மு, சொந்தப்பட முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

ஜெயா டி.வியில் குஷ்பு விட்ட இடத்தை சிம்ரன் நிரப்பியதையும் ஜனங்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்பொதென்ன அவருக்கு? பிக்பாஸ் 2 வில் சிம்ரனும் என்ட்ரி என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை கமல் தொகுப்பதற்கும், சிம்ரனின் முன்னாள் காதலுக்கும் சம்பந்தமிருக்காது என்றாலும், பழைய கிசுகிசுக்களை புரட்டிப்பார்க்கும் நேரம் நெருங்குகிறதோ?

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்