திரைச்செய்திகள்
Typography

இந்த வருடத்தின் சிறந்த காமெடி பீஸ் என்கிற பட்டத்தை ஒரே நாளில் வென்றெடுத்தார் சிம்பு.

அந்த பிரஸ்மீட்டே செம அல்டாப். டி.ஆர் காலில் விழுந்து வணங்கிவிட்டு வந்து மீடியா முன் நின்றவர், அப்படியே சில நிமிஷங்கள் ஆழ்ந்த பிரார்த்தனையில் இருந்தார்.

அதற்கப்புறம் கேமிராவுக்கு முன் நின்று நடிப்பது போல ஏகப்பட்ட பாசாங்குகள். இதற்கு கைதட்டுவதற்கு இரண்டு பக்கமும் விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்கள் வேறு.

இவ்வளவு பில்டப்புகளுக்கு பின் அவர் பேசிய விஷயம்தான் உவ்வே. ‘அம்மா தாயே... உங்க தேவை போக மீதி நீரை எங்களுக்கு பிச்சையா போடுங்க’ என்கிற ரேஞ்சில் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

மீடியாவுக்கும் அவருக்கும் வாதம் வேறு முற்றிவிட்டது.

அதுவரைக்கும் சிம்பு மீது இருந்த இமேஜ், அட... ஒண்ணும் தெரியாத சைபரே என்று ஆகிவிட, இனி அவர் அழைத்தால் கூட அந்தப்பக்கம் திரும்பக் கூடாது என்று சத்தியம் பண்ணாத குறையாக கலைந்தது பிரஸ். இது தமிழ்நாட்டில். ஆனால் அப்படியே ரிவர்ஸ் ஆகியிருக்கிறது கர்நாடகாவில்.

சிம்புவின் பேச்சுக்கு பலத்த மரியாதை கொடுத்திருக்கிறார்கள் பலரும். அதுதான் ஆச்சர்யம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS