திரைச்செய்திகள்
Typography

எப்படா ஸ்டிரைக் முடியும் என்று காத்திருக்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் திட்டவட்ட தீர்வை எட்டாமல் நொட்டாங்கையை கூட அசைக்க மாட்டேன் என்று கூறிவருகிறார் விஷால்.

இது ஒருபுறமிருக்க... தடையை தாண்டி தனது மெர்க்குரி படத்தை வெளியிடுவேன் என்று ட்விட் பண்ணியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அவ்வளவுதான். கோடம்பாக்கத்தின் அத்தனை தொண்டைகளும் ஒரே நேரத்தில் லவுட் ஸ்பீக்கராகி கார்த்திக் சுப்புராஜின் காதுகளை டேமேஜ் ஆக்கிவிட்டது.

நேரடியாக அவருக்கே போன் அடித்த விஷால், தாட் பூட்டென்று எகிற அடுத்த அரை மணி நேரத்தில் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வதாக ட்விட் பண்ணினார் கார்த்திக் சுப்புராஜ்.

சக்கரமில்லாத தேருல சக்கரவர்த்தி ஏறுனாலும் பிரயோஜனமில்ல. புரிஞ்சுதா சுப்பு?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்