திரைச்செய்திகள்
Typography

விஜய் ஆன்ட்டனியின் மார்க்கெட் லெவல், ஒன்றும் சுமார் ரகம் இல்லை.

நினைத்தால் ஹன்சிகா, நயன்தாரா ரேஞ்ச் ஹீரோயின்களுடன் கூட டூயட் ஆடிவிட முடியும்.

ஆனால், நமக்கு போதும் எள்ளுருண்டை என்பதே அவரது முடிவாகவும் கொள்கையாகவும் இருக்கிறது.

கேட்டால், ‘எனக்கே கொஞ்சம் கில்டியா இருக்கும்ங்க. அதான் நம்ம லெவலுக்கு ஏற்ற மாதிரி ஹீரோயின்கள் போதும்னு சொல்லிடுறேன்’ என்கிறார் வெளிப்படையாக.

‘படை வீரன்’ படத்தின் ஹீரோயின் அம்ரிதாவை அவர் தனது ‘காளி’ படத்திற்கு ஓ.கே சொன்னதும் கூட அந்த பாலிசிக்கு உட்பட்டுதான்.

அம்ரிதா மனசு என்ன சொல்லுது? ‘விஜய் ஆன்ட்டனி எவ்ளோ பெரிய ஹீரோ! ஐ ஆம் லக்கி’ என்று.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்