திரைச்செய்திகள்
Typography

பல வருடங்களாகவே திருட்டு விசிடி எடுக்கப்படுவது எங்கே?

வெளிநாட்டிலா, உள்ளூர் தியேட்டர்களிலா என்கிற சந்தேகம் உண்டு.

ஆனால் ‘மனுஷனா நீ’ என்ற சிறு படத்தை திருட்டுத்தனமாக எடுத்த ஒரு தியேட்டர் சிக்கியிருக்கிறது.

ஆன் லைனில் படம் வந்தவுடன் 59 ஆயிரம் ரூபாயை க்யூபுக்கு செலுத்தி, எந்த தியேட்டரில் வைத்து எடுக்கப்பட்டது என்கிற விபரத்தை வாங்கிவிட்டார் தயாரிப்பாளர் கஸாலி.

விஷயத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றால், ஒருவர் கூட வாயை திறக்கவில்லை.

சப்போர்ட்டுக்கு வராத சங்கத்தை சபித்துக் கொண்டே சொந்த முயற்சியில் ஆக்ஷன் எடுத்துவிட்டார் அவர்.

சம்பந்தப்பட்ட ஆட்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கஸாலிக்கு ஒரு கைதட்டல் இல்லை. திருட்டு விசிடிக்கு எதிரான பேச்செல்லாம் வெறும் பேச்சுதான் போலிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்