திரைச்செய்திகள்
Typography

மார்ச் 8 மகளிர் தினம். அதுக்கென்ன இப்போ? நயன்தாரா இதுபோன்ற தினங்களை கூட பார்த்து பார்த்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.

தற்போது அவர் நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தின் முதல் பாடலை இந்த தினத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாராம்.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை தமிழுலகம் ஆர்வத்தோடு எதிர்பார்த்து வந்தாலும், நயன்தாரா எதிர்பார்ப்பதுதான் ஆச்சர்யம்.

ஹீரோயின் ஓரியன்டட் பிலிம்கள், நயன்தாராவுக்கு மட்டுமே... என்ற எண்ணத்தை அண்மைக்கால ஜோதிகா தகர்த்து வருகிறாரல்லவா?

அதனால்தான் முன்னை விட எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறாராம் நயன். அழகு மூக்கு. நுழைச்சிட்டுதான் போகட்டுமே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்