திரைச்செய்திகள்
Typography

‘சிவா மனசுல புஷ்பா’ என்ற படத்தை இயக்கி நடித்து தயாரித்து வருகிறார் வராகி.

இரண்டு எம்.பி களின் கள்ள உறவுதான் இந்தப்படத்தின் மையக்கதை என்கிறார்கள். முதல் போஸ்டரே நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ரிலீஸ் கட்டத்தை எட்டிவிட்ட வராகி, இந்த கள்ள உறவு விவகாரத்தை மீண்டும் கிளறிவிடக் கிளம்பியிருக்கிறார்.

அவரது ஆயுதம் போஸ்டர் யுத்தம்தான். இந்த முறை ஏராளமான போஸ்டர்களை அடித்த வராகி, அவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட திருச்சியிலும், தூத்துக்குடியிலும் அதிகளவுக்கு ஒட்ட சொல்லப் போகிறாராம்.

போஸ்டரை ஆள் வைத்து கிழித்தாலும் பரபரப்பு.

கிழிக்காமல் சும்மா விட்டாலும் பரபரப்பு. எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா...?

Most Read