திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வ(வெ)ந்திருக்கும் படம் ‘விசிறி’.

பல மாதங்களாக ரிலீசுக்கு பிளான் பண்ணி சுமார் 200 தியேட்டர்களை புக் பண்ணி வைத்திருந்தார்களாம்.

ஆனால் திடீரென மூக்கை நுழைத்தது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படம்.

விஜய் சேதுபதி ஹீரோ என்பதால், எல்லா தியேட்டர்காரர்களும் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட... 200 சுருங்கி 50 ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இந்தப்படம் அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே நிலவும் சண்டை சச்சரவு பற்றியது.

‘அவங்க ஆதரவளிப்பாங்கன்னு பார்த்தேன்.

என் கஷ்டத்தை ரெண்டு பேருமே கண்டுக்கலையே’ என்று புலம்பல் சவுண்ட் கேட்கிறது.

Most Read