திரைச்செய்திகள்
Typography

பிராணிகளை நம்பி படமெடுத்த இராம. நாராயணன் இப்போது இருந்திருந்தால் பிராணிகள் நல வாரியத்தோடு நாள்தோறும் சண்டை இழுக்கிற அளவுக்கு போயிருக்கும் நிலைமை.

இந்த கொடூர கால கட்டத்தில் கொரில்லா என்றொரு படம் வரப்போகிறது. ஜீவா நடிக்கும் இப்படத்தில் இவருக்கும் ஒரு கொரில்லா குரங்குக்குமான ரிலேஷன்ஷிப் மற்றும் புரிதல்தான் முக்கியமாக இடம் பெறவிருக்கிறது.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் கொரில்லாவை உருவாக்கிக் கொள்வார்கள் என்றாலும், கொஞ்சம் நிஜத்தையும் கலக்க வேண்டும் அல்லவா? பிராணிகள் நல வாரியம் அனுமதித்த மருத்துவக் குழுவோடு ஒரு நிஜ கொரில்லாவை வரவழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. ஏப்ரல் விடுமுறைக்கு குட்டீஸ்களை கவர வருவான் கொரில்லா.

Most Read