திரைச்செய்திகள்
Typography

‘பாண்டிய நாடு’ படத்தில் விஷாலுடன் நடித்த லட்சுமிமேனனுக்கு இப்போதைய ஒரே நம்பிக்கை அதே விஷால்தான்.

அவ்வப்போது அவருக்கு மட்டும் போன் அடிக்கும் இவர், ‘தமிழ்சினிமாவுல திரும்பவும் ஒரு இடத்தை பிடிக்கணும். அதுக்கு நீங்கதான் உதவணும்’ என்கிறாராம் உரிமையோடு. நம்ம நிலைமையே நட்டுவாங்கம்.

இதுல இவங்க கச்சேரி வேறயா என்கிற கடுப்பு இருந்தாலும் அதை போனில் காட்டிக் கொள்ளாமல், ‘நல்ல கதை வரட்டும். நானே சொல்றேன்’ என்று சமாளிக்கிறாராம் விஷால். டயல் பேட் தேய்கிற அளவுக்கு தன் இருப்பை பதிவு செய்து கொண்டேயிருக்கிறார் லட்சுமி. எல்லா எதிர்முனைகளும் அவுட் ஆஃப் ஆர்டராக இருப்பதுதான் ஐய்யோ ஐயய்யோ!

Most Read