Saturday, May 25th

Last update10:29:13 AM

ஆங்கில படத்தின் சீடியை பார்த்து கதை பண்ணுவதில் இஸ்டம் இல்லை : இயக்குனர் சசிகுமார்

 இன்ஸ்பிரேசன் படங்கள் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் சுந்தரபாண்டியன் படத்தின் கதாநாயகனும்,

தயாரிப்பாளருமான சசிகுமார். மேலும் இதுபற்றிக் கூறுகையில்

    "இன்ஸ்பிரேசன் என்று சொல்லி படம் எடுப்பவர்கள் கண்டிப்பாக எந்த படத்தின் அல்லது நாவலின் இன்ஸ்பிரேசன் என்று பதிவு செய்து விடவேண்டும். அப்படி இல்லாமல் ஜனங்களாக கண்டு பிடித்து விட்டார்கள் என்றால் அசிங்கம். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இன்ஸ்பிரேசன் படம் எடுப்பது தவறு என்றும் சொல்லவில்லை, எது இன்ஸ்பிரேசன் என்பதையும் சொல்லிவிட  வேண்டும். முடிந்தால் ரைட்ஸ் வாங்கிவிட வேண்டும்.

     நம் வீட்டு தெருவில் நடந்தாலே 4 படம் எடுக்கும் அளவிற்கு கதைகள் கிடைக்கும். நம் ஊரில் பார்த்தால் 40 படத்திற்கு கதைகள் கிடைக்கும். இப்படி நம் மண்ணின் கதைகள் யதார்த்தமாகக் கிடைக்கும் போது, நாம் ஏன் வேறு எந்த நாட்டுக்காரனின் படத்திலயோ  இன்ஸ்பையர் ஆகி எடுக்கவேண்டும்.?

நிகழ்வொன்றில் ப்ரியா ஆனந்த் அழகிய படங்கள்      
கீரிப்புள்ள திரைப்பட ஆடியோ வெளியீடு - படங்கள்
The BIG Chennaiite Awards 2013 - கேலரி
ராம்சரன், ஜெனிலியா புதிய தெலுங்கு திரைப்பட கேலரி
Pizza - Tamil Movie Ready To Serve : படங்கள்

    தவிர பழைய படங்களை, புதிய நடிகர்கள் வைத்து திரும்ப எடுப்பதிலும் எனக்கு உடன்பட்டு இல்லை. அவர்கள் அதை சிறப்பாக செய்திருப்பதாலதான் அந்த படம் சூப்பர் ஹிட்டாகி  இருக்கும். அதை ஏன் மறுபடியும் நாம் குலைப்பானேன்? நம்மை சுற்றியிருக்கும் கதைகளை யதார்த்தமாக கமர்சியல் கலந்து கொடுத்தால் போதும். நான் தமிழ் சினிமா பார்த்து வளர்ந்தவன். எனக்கு ஆங்கில படத்தின் சிடியைப் பார்த்து கதை பண்ணுவதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை.

     என் மக்கள், என் சொந்தம் இவர்களிடம் கொட்டிக் கிடக்கும் கதைகளில் ஒன்றை அருமையாக படம் செய்து அவர்களிடம் சமர்ப்பித்தால், வெற்றி இயல்பாக கிடைக்கும் என்கிற நிலை இருக்கும் போது, நாம் ஏன் வீணாக அப்படி படம் எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும், இப்படி எடுத்தால்தான் வெற்றிக் கிடைக்கும் என்று குழப்பிக் கொள்வானேன்.  இப்போது யதார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா என் தயாரிப்பில் படம் செய்துகொண்டு இருக்கிறார். இது எனக்குக் கிடைத்த பெருமை' என்கிறார் இயக்குனர் சசிகுமார்.

சினி செய்திகள் சில ஆங்கிலத்தில்

மேலும் சில சினி செய்திகள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus